Bakhtin and Gramsci: Original Thinkers?

Bakhtin quote

 

Concluding remarks of Dr G Ravindran on Antonio Gramsci and Bakhtin on the second day of the two day seminar on Bakhtin and Gramsci by Prof.Craig Brandist on April 16-17 2014 at the Thanthai Periyar Hall, University of Madras

We should thank Prof.Craig for a very different classical approach. He provided a huge context, but used only a few slides. He succeeded in contextualising how Gramsci’s thoughts were influenced by this huge canvas of Russian thoughts. As before, as in yesterday’s session,what I like most in Prof.Craig’s approach is his cautious approach.He is a scholar who wants to be cautious about the main “sacred objects”. According to Prof.Craig we should not misread what gave birth to these “sacred objects” We need not forget the history of these “sacred objects”, that is to say, what caused Bakhtin to emerge and what caused Gramsci to emerge.

அந்த அளவில் இந்த இரண்டு நாள் அமர்வுகள், பக்தின் பற்றியும், கிராம்சி பற்றியும் ஒரு புதிய பரிமாணத்தில் நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றன. இரண்டாவது முக்கியமான விடயம், பேராசிரியரின் உரைகளில் அவர் எடுத்துக் கொண்ட இந்த தலைப்புகளையும் மீறி அவர் புதியதாக பல புதிய அறிஞர்களை அவர்களது பரிமாணங்களை அறிமுகப்படுத்திய பாணி வியப்புக்குறியது. இன்றையு அமர்வில், கிராம்சியினுடையு பண்பாட்டு மேலாதிக்கம் சார்ந்த கருத்தியல் பார்வைகள் எவ்வாறு ரஷ்ய அறிஞர்களால் விதைக்கப்படுகிறது என்று பேசும் பொழுது அவர் முதலில் குறிப்பிட்ட ஒரு முக்கியமான அறிஞர், பார்ட்டோலி . ரஷ்யாவில் 19வது நூற்றாண்டில் இயங்கிய மொழியியல் அறிஞர். இவர் ஆய்ந்தது எவ்வாறு மொழி சார்ந்த innovations ஒரு கூட்டத்திலிருந்து இன்னோரு கூட்டத்திற்கு போகிறது when conflicts between national languages and minority languages happen.இதை ஒரு முக்கியமான விடயமாக பார்ட்டோலி பார்த்தார் என்று பேராசிரியர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவில் கடந்த காலத்தில், முக்கியமாக 1905ல் நடந்த வரலாற்று சம்பவத்தை நாம் மறக்கலாகது என்று பேராசிரியர் கிரேய்க் குறிப்பிட்டார். முதல் முறையாக ஒரு ஆசிய நாடு (சப்பான்) ஒரு அய்ரோப்பிய நாட்டை (ரஷ்யா) போரில் தோற்கடிக்கும் நிலை ரஷ்யாவில் பல பாதிப்புகளை எற்படுத்துகிறது. டராட்ஸ்கி புதிய கருத்தாக்கத்தை வைக்கிறார். அக்டோபர் புரட்சி நடக்கிறது. இந்த புரட்சியாளர்கள் எவ்வாறு முன்று குழுக்களாக பிரிந்து தங்கள் வாத, பிரதி வாதங்களை வைக்கிறார்கள் என்று பேராசிரியர் கிரேய்க் சொன்னார். அப்புறம், போல்ஷ்விக் என்று அழைக்கபட்ட கூட்டத்தினருக்கும், மென்ஷிவிக் என்று அழைக்கப்ட்ட கூட்டத்தினருக்கும் இடையே நடந்த மோதலைப் பற்றி குறிப்பிட்டார். இதன் ஊடே, புரட்சியின் முக்கியமான கதாநாயகனான லெனின் எவ்வாறு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மேல் குறிப்பிட்ட பண்பாட்டு மேலாதிக்க சிந்தனையை தெளிவுப்படுத்துகிறார் என்றும் கூறுகிறார். அவர் லெனின் சொன்ன அந்த வார்த்தைகளை நீண்ட மேற்கோளாக காட்டிய விடயம் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த மேற்கோள் liberalism என்ற விடயத்தை லெனின் எவ்வாறு பார்த்தார் என்பதை சுட்டுவது. இரண்டாவதாக, அவர் குறிப்பிட்ட முக்கியமான நபர், பாக்தேனேவ். பாக்தேனேவ் குறிப்பிட்ட மொழி சார்ந்த விடயம் பேராசிரியரால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மொழி சார்ந்த விடயம் எவ்வாறு உற்பத்தி தளங்களின் மூலதனமாக ஆகிறது என்று பாக்தேனேவ் பார்த்ததாக கிரேய்க் குறிப்பிட்டார். Proletariatம், bourgeioisம் எவ்வாறு இதை வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பது பாக்தேனேவ் பார்வையில் புதிய கருத்தாக்கமாக உருமாறுகிறது. உதாரணத்திற்கு. பூஷ்வாக்கள் இதை ஒரு commodity exchange பார்வையில் பார்க்கிறார்கள். Proletariat இதை வேறு விதமாக பார்க்கிறார்கள் என்றார் பாக்தேனேவ்.

இவற்றை எல்லாவற்றையும் விட, எது விஞ்சி நிற்கிறது என்றால் பாக்தேனேவின் hegemony சார்ந்த பார்வை.. இது கிராம்சி பின்னாளில் கையிலேடுத்த, செம்மைப்படுத்திய, செப்பனிட்ட ஒரு முக்கியமான கருத்தியல் தளம், அதனுடைய ஆழமான வேர் ரஷ்யாவில் விதைக்கப்பட்டது என்பது பலருக்கு தெரியாது. Hegemony பற்றி பல அறிஞர்கள், பல்வேறு தளங்களில் பேசிக் கொண்டு வரும் பொழுது, புக்காரின் என்ற அறிஞர் வெகுவாக அடுத்த கட்டத்திற்கு இதைக் கொண்டு போனதாக பேராசிரியர் சொன்னார். அந்த பண்பாட்டு மேலாதிக்கத்தை எவ்வாறு நாம் பார்க்கலாம் என்று புக்காரின் தெளிவாக, 1920களில் குறிப்பிட்டதாக பேராசிரியர் கூறினார். அதே கால அளவில், லெனின் மறைந்துப் போகிறார், அதாவது 1924ல். 1925ல் சோவியத் நாட்டின் பொதுவுடமை கட்சி புதிய பொருளாதரக் கொள்கையை அறிவிக்கிறது. அப்பொழுது, முதலாம் உலகப் போரினால் எற்பட்ட விளைவுகளுக்கு பதிலாக அவர்கள் limited, regulated market economyஜ அறிமுகப்படுத்துகிறார்கள். அப்பொழுது ஒரு முரணான நிலை எடுக்கப்படுகிறது. அதாவது, தேசிய மொழி எதுவாக இருக்கலாம், சிறுபான்மையினர் மொழி எந்த தளத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை அது. தேசிய மொழியை எவ்வாறு வளர்த்தேடுக்கலாம் என்பது பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை அவர்களுக்கு வருகிறது. அவர்கள் அப்பொழுது வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். இந்தியப் பார்வையில் இருந்து பார்த்தால், அது வித்தியாசமாக இருக்கும். 1960களில் நடந்த மொழிப் போர் எவ்வாறு இந்தியாவில், தமிழ் நாட்டில் பார்க்கப்பட்டது என்பதை நண்பர்கள் அறிவீர்கள். ஆனால், 1920களில் ரஷ்யாவில் இந்த மொழி சார்ந்த விடயத்தை வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள். இதை மேலாதிக்கப் பார்வையில் அவர்கள் எவ்வாறு பார்த்தார்கள் என்றால், “நாம் எடுத்த உடனே ரஷ்ய மொழியை national languageஆக அறிவிக்க கூடாது. முதலில் நாம் இதை மறுக்க வேண்டும். ரஷ்ய மொழி தேசிய மொழி என்பதை மறுக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், நாம் சிறுபான்மை மொழிகளை வளர்த்தேடுக்க வேண்டும். ஒரு கால அளவிற்கு பிறகு, இந்த எல்லா மொழிக் கூட்டத்தினர்களும் ஒரு சம அளவிற்கு வரும் நிலையில் அவர்களாகவே ரஷ்ய மொழியை தேசிய மொழியாக எற்றுக் கொள்வார்கள்“. அந்த காலத்தில் ரஷ்யாவில் பண்பாட்டு மேலாதிக்க சிந்தனை எவ்வாறு மொழி சார்ந்து இயங்கியது என்பதை இவ்வாறு பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.

பல அளவுகளில், இந்த காலக் கட்டத்தில், ரஷ்யாவில் இயங்கிய அறிஞர்கள் பின்னாளில் எழுந்த முக்கியமான விவாதப் பொருட்களுக்கு காரணக்கர்த்தாக்களாக இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டும் பொழுது, பேராசிரியர் கிரேய்க் எட்வர்ட் செய்துனுடைய கருத்தாக்கமான orientalism எவ்வாறு இங்கு விதைக்கப்படுகிறது என்று சொன்னார். நீங்களேல்லாம் எட்வர்ட் செய்துனுடைய Orientalism என்ற நூலை வாசித்திருப்பிர்கள். இந்த நூலுக்கான அடித்தளமும் ரஷ்யாவில்தான் விதைக்கப்படுகிறது. நிக்கோலாய் மார் என்ற மொழியியல் அறிஞர் இந்திய சார்ந்த மேற்கத்திய பார்வைகளை ஒரு கருத்தியல் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். பின்னாளில், இந்த விடயத்தை செய்த் தனது படைப்பில் புகுத்தினார் என்பதையும் பேராசிரியர் விளக்கினார். இதில் நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது, நேற்று அவர் சொன்ன முக்கியமான வாசகத்தைதான் இன்றும் அவர் சொல்லாமல் சொன்னார். அதாவது பக்தின் ஒரு original thinker இல்லை”. அதுதான் நேற்று நமக்கு புலப்பட்ட விடயம். அதே மாதிரி, “கிராம்சியும் ஒரு original thinker இல்லை”. அவர்கள் original thinkersகளாக இயங்கியிருக்கலாம், ஆனால், அவர்களின் பின்புலத்தில் வரலாறு சார்ந்த காரணிகளாக இயங்கிய இந்த முக்கியமான நபர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பேராசிரியர். கிராம்சியைப் பற்றி நினைக்கும் பொழுதும், அவரைப் பற்றி புரிந்து கொள்ள நினைக்கும் பொழுதும், பக்தினைப் பற்றி நினைக்கும் பொழுதும், அவர்கள் பின்னால் இருக்க கூடிய நீண்ட நெடிய பாரம்பரிம் சார்ந்த அறிவு தேடலை, பல அறிஞர்கள், பல தளங்களில், பல வரலாற்று நிகழ்வுகள் சார்ந்து அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார். இந்த அளவில் எனது மொழியாக்க உரையை முடித்துக் கொள்கிறேன்.

On Antonio Gramsci

கிராம்சி

Introductory remarks of Dr G Ravindran on Antonio Gramsci on the second day of the two day seminar on Bakhtin and Gramsci by Prof.Craig Brandist on April 16-17, 2014 at the Thanthai Periyar Hall, University of Madras

M&S13-14 12________________________________________________________________________________

Prof.Craig Brandist is Professor of Cultural Theory and Intellectual History at University of Sheffield, UK. He teaches Critical Theory, Bakhtin Circle, Research Methods in Modern Languages and European Cinemas.

________________________________________________________________________________

“Good morning. அனைவருக்கும் வணக்கம். Today we are continuing the seminar with another interesting session by Prof.Craig. Today’s session would introduce us as lucidly as possible, as he made it yesterday, to the contributions of Antonio Gramsci and how we need to look at his contributions.

பேராசிரியர் தனது உரையை தொடங்குவதற்கு முன், மாணவர்களுக்கு தமிழில் கிராம்சியைப் பற்றிய அறிமுகம் தேவைப்படும் என்பதால், சுருக்கமாக அவரைப் பற்றி சொல்கிறேன்.அந்தோனியோ கிராம்சி இத்தாலியில் பிறந்தவர். 46 ஆண்டுகள் தான் உயிருடன் இருந்தார். ஆனால் அவர் ஒரு பெரிய அறிவுப் புரட்சியை செய்ததாகப் பார்க்கலாம். Classical marxism என்ற தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு போக உதவியவர் அவர். உடல் ரீதியாக பல இன்னல்களுக்கு உள்ளானவர். அவரது முதுகெலும்பு வளர்ச்சியின்மையால் அவரால் எந்நேரமும் நிமிர்ந்து நடக்க முடியாத நிலை. மேலும் பல உடல் ரீதியான பாதிப்புகளுக்கு அவர் உள்ளான போதும், அவரது தந்தையார் வேலையை இழந்த போதிலும், அவருக்கு சரியான நிதி ஆதாரங்கள் கிடைக்காத போதிலும், படிப்பை தொடருவதிற்கு அவர் சிரமப்பட்ட போதிலும், அவர் அக்காலத்திய இத்தாலியில் நிகழந்த அரசியல், சமுகப் பிரச்சனைக்களுக்கு ஊடே தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட காரணத்தினால், இடது சாரி கட்சி காலுன்றிய அந்த காலத்தில், அதனால் ஈர்க்கப்பட்டு, அதன் கருத்தியல் சார்ந்து அவர் இயங்க தொடங்கி, பின்னாளில் அதன் தலைவராகவும் அவர் உருவெடுத்தார். ரஷ்யப் புரட்சிக்கு அடுத்தக் கட்டமாக என்ன நடக்க வேண்டும், மற்ற அய்ரோப்பிய நாடுகளில் இந்த புரட்சி எவ்வாறு பரவ வேண்டும் என்பதைப் பற்றி தீர்க்கமான பார்வையைக் கொண்டிருந்தார். செவ்வியல் மார்க்சிய வாதம் ஏன் பயன்படாது என்ற கேள்விக்கான பதிலை 1920களிலே அவர் புரிந்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் மார்க்சியம் வெகுவாக பரவவில்லையே என்று நாம் ஆதங்கப்பட வேண்டும். ஏன் அப்படி ஆதங்கப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள இடது சாரி கட்சிகள் தங்களை ஒரு சிறிய எல்லைக்குள் சுருக்கி விட்டனர். மார்க்சியத்தை எந்த அளவிலும் வளர விடக் கூடாது என்று நினைத்தவர்களில்/நினைப்பவர்களில் முதலாளித்துவக் கட்சிகள் முதலிடம் வகித்தால், இடது சாரிக் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளால் அந்த நிலைக்கு ஆதரவு அளிப்பது ஒரு சோகமான உண்மை. மார்க்சியம் இந்தியாவில் வளராததற்கு காரணம் என்ன என்று என்னைக் கேட்டிர்கள் என்றால், நான் சுட்டிக் காட்டக் கூடிய முக்கியமான காரணம், நமது மார்க்சியத் தோழர்கள் என்று தான் கூறுவேன் (ஒரு சில ஆளுமைகளைத் தவிர்த்து). முதலில், அவர்கள் மார்க்சைப் புரிந்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்தை வெகு மக்களிடம் பரப்ப அவர்கள் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை. மார்க்சியத்தை அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு, அய்ரோப்பிய நாடுகளில், கிராம்சி மாதிரியான ஆளுமைகள் கொண்டு போன அளவிற்கு, இவர்கள் சிந்திக்கவில்லை. இந்திய சமுக யதார்த்தமான சாதீயத்திற்கு எதிராக மார்க்சியத்தின் கருத்தியல் பரிமாண வளர்ச்சிக்கு வித்திடவில்லை. இவர்கள் இன்றும் வர்க்க ரீதியாகவும், சாதீயா ரீதியாகவும், ஒரு சிறிய வட்டத்திற்குள் தங்களை நுழைத்து, அந்த வட்டத்திற்குள் இருந்து ஒரு பெரிய புரட்சியை உருவாக்க, வளர்ச்சி சார்ந்த நிலையை நோக்கி தாங்கள் பயணிப்பதாக நினைத்துக் கொள்ளும் utopian நிலையில் இருக்கிறார்கள்.

இரண்டாவது, ஏன் இங்கு மார்க்சியம் காலுன்றவில்லை என்றால், கிராம்சி முன்வைத்த பண்பாட்டு மேலாதிக்க சக்தியாகவே இவர்கள் உருவேடுத்து விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவில் இருக்க கூடிய வெகு மக்கள் ஊடகங்களை இயக்கும், மூலதனம் சார்ந்து இயங்க கூடிய முதலாளிகளுடன் திருமண உறவு வைத்துக் கொண்டு இயங்கும் பலரில் இடது சாரி கட்சி தலைவர்களும் அடக்கம். அவர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. போன தலைமுறை மார்க்சிய தலைவர்கள் இப்படி இல்லை. .எம்.எஸ் இப்படி இல்லை. ஆனால், இந்த தலைமுறை மார்க்சிய தலைவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களையும் எமாற்றிக் கொண்டு, நம்மையும் எமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதிலே notable exceptions இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் நல்ல உதாரணங்கள் உண்டு. அய்யா நல்லக்கண்ணு மாதிரியான உன்னதமான தலைவர்கள் இருக்கிறார்கள். இனி இவர்கள் பிறப்பார்களா என்று எண்ணக் கூடியத் தலைவர்கள் இவர்கள். கடவுளைக் கூட பார்த்து விடலாம். ஆனால், பெரியவர் நல்லக்கண்ணு மாதிரியான மார்க்சிய தோழர்களை இனி வரும் காலத்தில் பார்க்கவே இயலாது. ஒரு மனிதர் இப்படித்தான் இருக்க வேண்டும், அவர் இருக்கிறாரா, கடவுளை ஒத்த மனிதர் இருக்கிறார, அவரை நான் பார்க்க வேண்டும் சார் என்று கேட்டிர்கள் என்றால், அவர் இருக்கிறார். தியாகராய நகரில் தான் இருக்கிறார். அவர் appointment எல்லாம் யாருக்கும் தர மறுப்பதில்லை. இங்கு அருட் தந்தை குழந்தை இருக்கிறார். அவரது நெருங்கிய தோழர். அவரிடம் அனுமதி வாங்கி தருவார். நல்லக்கண்ணு அய்யா அவர்களை பார்த்தீர்கள் என்றால், கிராம்சியை வேறு பார்வையில் பார்ப்பீர்கள். மற்ற இந்திய இடது சாரி தலைவர்களை வேறு பார்வையில் பார்ப்பீர்கள்.

இந்த அற்புதமான மனிதர் கிராம்சி, 46 வருடங்களே வாழ்ந்த இவர், உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல சிக்கல்களுக்கு உட்பட்டு இருந்தாலும், மார்க்ஸ் செய்யாத ஒரு புரட்சியை, அறிவு சார் புரட்சியை கிராம்சி செய்ததாக நான் பார்க்கிறேன். கொச்சையாக சொல்ல வேண்டும் என்றால், மார்க்ஸ் எங்கே கோட்டை விடுகிறார் என்றால், அடிப்படை பொருளாதார வாதத்திலிருந்து அவர் வெளியே வர மறுக்கிறார். முதல் முறையாக, புதிய மார்க்சிய வாதிகளான, பிராங்பர்ட் அறிஞர்களும், மற்றும் கிராம்சி போன்றோர்களும் இந்த புதிய மார்க்சிய வாதத்தை கட்டமைக்கின்றனர். அடர்னோ, ஆர்க்கைமர், பின்னாளில், அல்துசர் அதை வளர்தேடுக்க ஒரு பாதையை போட்டு தந்தவர் கிராம்சி. Hegemony, ideology, historicism இவைப் பற்றிய ஒரு புதிய தாக்கத்தை எற்படுத்தியவர் கிராம்சி. முதலாளிகள், மூலதனம் சார்ந்து இயங்குபவர்கள் எவ்வாறு மக்களை, சமுக அங்கங்கள, பண்பாட்டு ரீதியாக, கருத்தியல் ரீதியாக, தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கருத்தியல் விளக்கத்தை அளித்தவர் கிராம்சி. இன்றைக்கும் நீங்கள் தமிழ் நாட்டு சூழலில் ஒன்றைப் பார்க்கலாம். ஒவ்வோரு தேர்தலிலும் நாம் நடிகர்களை சார்ந்து, அவர்கள் கருத்துகள் சார்ந்து இயக்கப்படுகிறோம். திரைக்கு வெளியே நமக்கும் அவர்களுக்கும் எந்த வாழ்வியல் தொடர்பும் கிடையாது. ஆனால், வெகு மக்கள் ஊடகங்கள் இவர்களின் செல்வாக்கை பிரகாசமாக வெளிச்சம் போட்டு அறிமுகப்படுத்தும் காரணத்தினால், இந்த நடிகர் இவருடன் சேர்ந்தால் இது நடக்குமா என்று நம்மை யோசிக்க வைப்பதுதான் கிராம்சி சொன்ன cultural hegemony. ஒரு சராசரி மனிதர், தினமும் கஞ்சிக்கும், கூழுக்கும் கஷ்டப்படும் நபர், ஒரு புரட்சி நடிகரைப் பார்த்து தன்னிலை மறப்பது ஏன்? வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் எம்ஜியார் ரசிகர்கள் ஏன் அவர் பாடத்தை பார்த்தார்கள், இந்த காலத்தில் ரஜினி ரசிகர்கள் ஏன் அவர் படத்தை பார்க்கிறார்கள், விஜய் ரசிகர்கள் ஏன் அவர் படத்தை பார்க்கிறார்கள் என்றால், இதில் கிராம்சி விளைவு இருக்கிறது. கிராம்சியின் விளைவு இல்லையேன்றால், எம்ஜியார், ரஜினி, விஜய் எல்லோரும் தோற்று விடுவார்கள். அவர்கள் படங்கள் ஒடும் அரங்கங்களில் ஆள் இருக்காது.

That is one interesting example I work with in my area of research in film studies. Without this powerful logic introduced by Gramsci, Indian theatres would be empty. You may have Sharukh Khan on the screen, MGR on the screen, Vijay on the screen, but you may not have any audience.

இது தான் பண்பாட்டு ரீதியாக நம் மனதில் விதைக்கப்பட்ட மேலாதிக்க சிந்தனை விளைவு. அவர்கள் கடவுளாக உருவகம் பெறுவதற்கு முன், நாம் அவர்களை கடவுளாக மாற்றுகிறோம். எவ்வாறு மாற்றுகிறோம்? இந்த வெகு மக்கள் பண்பாட்டு தளங்களை கட்டுப்படுத்தும் மூலதனம் சார்ந்து இயங்குபவர்கள் நமது மூளையில் உட்கார்ந்துக் கொண்டு பண்பாட்டு மூளைச்சலவை செய்வது தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

கிராம்சி 1926ல் சிறையில் அடைக்கப்படுகிறார். 1934ல் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் தான் உயிருடன் இருக்கிறார். இதற்கு முன், ரஷ்யாவில் நடந்த துர்பாக்கிய சம்பங்களும் மார்க்சியத்தின் தோல்விக்குகாரணம் ஆகின்றன. பேராசிரியர் அதைப் பற்றி விளக்குவார்.

We misread marxist history because of these so called “violations” by the Stalinist regime. நாம் எல்லோமே முடிந்து விட்டதாக ஒரு மாய பிம்பத்திற்கு வந்ததற்கு காரணம், இந்த ஸ்டாலின் என்ற தவறான மனிதர் லெனினுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தது. மேலும், இதோட கதை முடிந்து விட்டது, இனி மேல் கதை தொடராது என்று நாம் நினைத்ததும் ஒரு காரணம். We should read it as an aberration or “violation” within the system.

இதையும் மீறி, கிராம்சி இத்தாலியில் நடக்கும் விடயங்களைப் பற்றி மாஸ்கோவிற்கு கடிதம் எழுதுகிறார், “இங்கு நடப்பது சரி என்று தோன்றவில்லை,” என்று. ஆனால், மாஸ்கோவில் இருந்த அவரது முகவர் அக்கடிதத்தை கொடுக்க தவறுகிறார், வேண்டும் என்றே. கிராம்சிக்கு இத்தாலிய பொதுவுடமை கட்சியிலேயே ஆதரவு இல்லையேன்று இதன் மூலம் தெரிகிறது.

நாம் வரலாறை மேலும் கவனமாக, விரிவாக, பரந்துப்பட்ட பார்வையில் பார்க்க வேண்டும். கேள்விகள் எழுப்ப வேண்டும. இந்தியாவில் ஏன் மார்க்சியம் வளரவில்லை? பொதுவுடமை கட்சிகளை நாம் ஏன் வேறு பார்வையில் பார்க்க வேண்டும்? வெகு மக்கள் ஊடகங்கள் நமக்கு செய்யும் அநியாயங்கள் யாவை? சராசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்களுக்கும் கிராம்சி சொன்ன கருத்தாக்கங்களுக்கும் என்ன் தொடர்பு? இவற்றைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்க இந்த அமர்வு உதவி செய்யும் என்று நம்புகிறேன். Now I invite Prof. Craig to deliver his lecture.